தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாட்சப்பில் போட்டோ வந்தவுடன் டவுன்லோட் செய்யும் நபரா நீங்கள்?.. பணத்தை ஆட்டையைப்போடும் கும்பல்.!!

வாட்சப்பில் போட்டோ வந்தவுடன் டவுன்லோட் செய்யும் நபரா நீங்கள்?.. பணத்தை ஆட்டையைப்போடும் கும்பல்.!!

cyber police warns about new forgery that hacks bank accounts via whatsapp images Advertisement

வாட்சப்பில் போட்டோ அனுப்பிவிட்டு அதனை டவுன்லோட் செய்ததும், உங்களது அக்கவுண்டில் உள்ள மொத்த பணத்தையும் சுருட்ட புதிய மோசடி நிகழ்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணைய வழியில் குற்ற செயல்களில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை சமீபகாலமாகவே அதிகரித்துள்ளது. இவர்கள் அறியாமையில் இருக்கும் மக்களின் பணத்தை திருட பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

குற்றங்களை தடுக்கும் காவல்துறை :

குற்றங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும் அது குறித்த புகார் கிடைத்ததும் 24 மணி நேரத்தில் பணத்தை மீட்டுத் தரவும், குற்றவாளிகளை கைது செய்யவும் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

புதிய மோசடி :

ஆனால் இவ்வாறான குற்றவாளிகளின் பிடியில் இருந்து தப்பிக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதனிடையே வாட்ஸ் அப் செயலியின் மூலமாக புதிய மோசடி ஒன்று நடப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

புது டெக்னீக் :

அதாவது தெரியாத புது நம்பரில் இருந்து ஏதேனும் மெசேஜ் வந்தால், அது புகைப்படம் போன்ற வடிவில் இருந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான நபர்களை பிளாக் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

தொட்டா தூக்கிருவன் என்ற பாணியில் மோசடி :

போட்டோ மூலமாக வைரஸை அனுப்பும் மோசடியாளர்கள், போட்டோவை நாம் பதிவிறக்கம் செய்தவுடன் நமது வங்கி கணக்கு உட்பட பிற விபரங்களை திருடி மோசடி செயலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Scam #WhatsApp Scam #image download #Cyber Attack #வாட்சப்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story