டெங்குக்கு பிரேசில் கண்டுபிடித்த உலகின் மிகப்பெரிய கொசு தொழிற்சாலை! இனி கடிச்சாலும் பாதிப்பு இல்லை...
டெங்கு நோயை கட்டுப்படுத்த பிரேசிலில் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய பாதுகாப்பான கொசுத் தொழிற்சாலை, வாரத்திற்கு 1.9 கோடி வோல்பாக்கியா கொசுக்களை உற்பத்தி செய்து நோய் பரவலை தடுக்கும் புரட்சிகர முயற்சி.
உலகளவில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த புதிய முறைகள் தேடப்படும் நிலையில், பிரேசில் முன்னெடுத்த முயற்சி தற்போது உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய கொசுத் தொழிற்சாலை
பிரேசில் நாட்டின் சாவோ பாலோ மாகாணத்தில் உள்ள காம்பினாஸ் பகுதியில் உலகின் மிகப்பெரிய ‘கொசுத் தொழிற்சாலை’ நிறுவப்பட்டுள்ளது. இங்கே வாரத்திற்கு சுமார் 1.9 கோடி பாதுகாப்பான கொசுக்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை டெங்கு, சிகா, சிக்குன்குனியா போன்ற நோய்களை பரப்பாத வகையில் வடிவமைக்கப்பட்டவை.
Wolbachia தொழில்நுட்பத்தின் அதிசயம்
இந்தக் கொசுக்களின் உடலில் Wolbachia என்ற பாக்டீரியா செலுத்தப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் இல்லாத இந்த பாக்டீரியா, கொசுவின் உடலில் டெங்கு வைரஸ் பெருகுவதை தடுக்கிறது. அதனால் மனிதரை இந்தக் கொசுக்கள் கடித்தாலும் டெங்கு வைரஸ் பரவாது என்ற உறுதி உருவாகிறது.
இதையும் படிங்க: வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்! மருத்துவ நிபுணர்களின் விளக்கம் ! இந்த அறிகுறிகள் தென்பட்டால் அசால்ட்டாக இருக்காதீங்க...
காலத்தால் விரிவடையும் பாதுகாப்பு வலயம்
இங்கு தயாரிக்கப்படும் Aedes aegypti வகை கொசுக்கள் இனப்பெருக்கத்தின் போது Wolbachia பாக்டீரியாவை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதால், அந்தப் பகுதியில் உள்ள முழு கொசு கூட்டமே பாதுகாப்பானதாக மாறுகிறது. இதன்மூலம் டெங்கு பரவலின் ஆபத்து தாறுமாறாக குறைகிறது.
பிரேசில் அரசு இந்த செயல்முறையை பல நகரங்களில் நடைமுறைப்படுத்தியதன் பின்னர், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த வெற்றித் திட்டம் இந்தியாவைச் சேர்த்த பல நாடுகளின் கவனத்தை ஈர்த்து, தொற்றுநோய் கட்டுப்பாட்டில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது.