×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவர் ஒன்னும் வெறும் காலோடு போகல.! மனசு வலிக்குது.! ஆதங்கத்துடன் ஆர்த்தி ரவி வெளியிட்ட இறுதி அறிக்கை!!

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தனது கணவர் எதுவுமின்றி வீட்டை விட்டு செல்லவில்லை. நன்கு திட்டமிட்டே சென்றுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து விவகாரம்தான் சமூக வலைதளங்களில் பெரும் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரவி மோகன் அண்மையில் அவர் தனது தோழி பாடகி கெனிஷாவுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அதனை குற்றம் சாட்டி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து நடிகர் ரவி மோகனும் பதில் அறிக்கை வெளியிட்டார்.

கெனிஷாவுடன் ரவி மோகன்

அதில் அவர், கெனிஷா எனது நல்ல தோழி. எனது வாழ்க்கைக்கு ஒளியாய் வந்தவர். என் முன்னாள் மனைவியும் அவரது குடும்பத்தாரும் என்னைக் கொடுமைப்படுத்தினர். என் சுதந்திரத்தைப் பறித்து பொருளாதார ரீதியாக கஷ்டப்படுத்தினார்கள் என பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஆர்த்தி இறுதியாக ஐந்து பக்க நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சித்திரவதை செய்த மாமியார்! மகளை வாழாவெட்டி ஆக்குனா அம்மா! இணையத்தில் ரவிமோகன் மாமியார் வெளிவிட்ட அறிக்கை இதோ....

ஆர்த்தி ரவி அறிக்கை

அதில் அவர், கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்தக் காலத்தில் என்னைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகள் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்துவிட்டது. ஒருமுறை கடைசியாக அனைவருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். 

மூன்றாவது நபரே காரணம்

எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர் தான். "உங்கள் வாழ்வின் ஒளி” எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை. இந்த நபர், சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு முன்பே எங்கள் வாழ்கையில் வந்துவிட்டார். 

கட்டுப்படுத்திய மனைவி

எனக்குக் ‘கட்டுபடுத்திய மனைவி' என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கணவரை அன்புடன் பராமரித்து, அவருக்குக் கேடு தரும் தீய பழக்கவழக்கங்களிலிருந்தும், எங்கள் வீட்டின் உறுதியை சீர்குலைக்கும் விஷயங்களிலிருந்தும் அவரைப் பாதுகாத்துக் கட்டுப்படுத்தியது என் குற்றம் என்றால், அப்படியே இருக்கட்டும். 

வெறும் காலோடு வெளியேறவில்லை

தனது சொத்துகளை, கௌரவத்தை இழந்து வெறும் காலோடு ஒன்றும் அவர் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை. நன்றாக முன் கூட்டியே மிக தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரேன்ஞ் ரோவர் காரில்தான் வீட்டை விட்டுச் சென்றார். 

பிள்ளைகள் படும் வேதனை

அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும், மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டுதான் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையில் அவர் எனது பிடியில் இருந்து தப்பி செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி “தொலைத்த பெற்றோர்கள்" என்று குறிப்பிடும் அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? கடந்த ஒரு வருட காலத்தில் நான்கு முறை மட்டும்தான் அவர் தன் பிள்ளைகளைச் சந்தித்திருக்கிறார். அதுவும் அவருடைய விருப்பத்தின் பேரில் மட்டுமே. எங்கள் பிள்ளைகள் இன்று படும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. என ஆதங்கத்துடன் பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.


இதையும் படிங்க: அடக்கடவுளே.. இரத்தக் காயங்களுடன் தமிழ் நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Arthi #Ravi Mohan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story