×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கூகுள் நிறுவனம் தலைமையகத்தில் 22 வயது ஊழியர் மர்மமான முறையில் மரணம்! போலீசார் விசாரணை

22 year old employee dead at google workplace

Advertisement

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருக்கும் கூகுள் நிறுவனத்தின்  தலைமையகத்தில் 22 வயதில் ஊழியர் ஒருவர் பணி செய்யும் இடத்திலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை தலைமை அதிகாரியாக இருந்து வரும் கூகுள் நிறுவனம் சமீப காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் மீது பாலியல் அத்துமீறல் நடப்பதாக புகார் அளித்தனர். இதனால் சுமார் 94 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சுந்தர் பிச்சை தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்திற்கு அடுத்த பிரச்சனை தலைதூக்கியுள்ளது. நியூயார்க் கூகிள் தலைமையகத்தில் பணியாற்றிய ஸ்காட் கேர்ள்சிக் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 9 மணியளவில் அலுவலகத்தின் ஆறாவது மாடியில் தான் பணிபுரிந்த இடத்திலேயே அசைவின்றி கிடந்துள்ளார்.

இதை கண்ட சக ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் அங்கேயே இறந்துள்ளது பின்னர் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்காட்டின் உடல்நிலையில் எந்த பிரச்சனை இருந்ததாகவும், அவர் எந்தவித மருந்துகளை சாப்பிட்டு இருப்பதாகவும் அறிகுறிகள் தென்படவில்லை. முழு உடல்கூறு பரிசோதனைக்கு பிறகே அவரது இறப்பிற்கு காரணம் என்னவென்று தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பட்டப்படிப்பு முடித்த ஸ்காட் கடந்த ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்த நான்கு மாதத்திலேயே அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதை நினைத்து அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#google headquaters #google employee dead #New york
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story