×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நான் தூக்கு மாட்டப்போறேன்" - காதலியிடம் நடித்த இளைஞன்.. எமனான விளையாட்டு.. காதலி கண்முன் சோகம்.!

Nagarcoil News: தூக்கிடுவதுபோல காதலியிடம் நடித்த முத்துகிருஷ்ணன் எதிர்பாராத விதமாக பலியானார். இந்த சோகம் நாகர்கோவில் வடசேரியில் நடந்துள்ளது.

Advertisement

காதலியிடம் நடித்த இளைஞர் எதிர்பாராத விதமாக உயிரை இழந்தார்.

காதல் விவகாரம்:

Kanyakumari News Today: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தெரியவருகிறது.

இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!

நடிப்பு எமனானது:

இதனால் காதலியை பயத்தில் ஆழ்த்த, முத்துகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்வதுபோல வீடியோ கால் பேசி பாவனை செய்துள்ளார். அப்போது, கழுத்தில் இருந்த முடிச்சு எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்ள, இந்த சம்பவத்தில் கழுத்து இறுக்கி இளைஞர் பரிதாபமாக பலியானார். 

காவல்துறை விசாரணை:

இதனைக்கண்டு அதிர்ந்துபோன முத்துகிருஷ்ணனின் காதலி உடனடியாக காதலரின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின் இதுதொடர்பாக தகவல் அறிந்த வடசேரி காவல்துறையினர், நேரில் வந்து முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #suicide #Prank Goes Wrong #நாகர்கோவில் #காதலி #தற்கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story