பிளாக்கில் வாங்கிய சரக்கு எமனான சோகம்.. போர்க்கொடி தூக்கிய உறவினர்கள்.. கண்ணீர் குமுறல்.!
மதுக்கடை திறக்கும் முன்னரே விற்பனை செய்யப்பட்ட திருட்டுத்தனமாக மதுவை பிளாக்கில் வாங்கிக்குடித்த இளைஞர் உயிரிழந்தார்.
திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை குடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரவுநேர வேலை:
மயிலாடுதுறை மாவட்டம் தென்னலக்குடி பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர் ஆவார். பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று சதீஷ் இரவு நேர வேலைக்குச் சென்றுவிட்டு, பின் மீண்டும் காலை வீட்டுக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!
டாஸ்மாக் திருட்டு மது:
அப்போது, வழியில் தென்னலக்குடி பகுதியில் டாஸ்மாக் கடை அருகிலேயே, காலை 10 மணிக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட டாஸ்மாக் மதுவை வாங்கி குடித்துள்ளார். இதனை குடித்தவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உறவினர்கள் போராட்டம்:
அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது மயக்கமான நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு சாலையை மறித்து போராட்டம் செய்தனர்.
காவல்துறை விசாரணை:
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷுக்கு மனைவியும், ஒரு பெண், 2 ஆண் என 3 குழந்தையும் இருக்கின்றனர். திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுவில் இருந்தது என்ன? என்பது தெரியாததால் உறவினர்கள் துயரத்தில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூர செயல்.! பதறவைக்கும் காட்சிகள்.!