×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: விஜயின் பொதுக்கூட்டத்தில் இளைஞர் பலி.. விஜயை நேரில் பார்க்க வந்து சோகம்.!

சேலத்தில் நடந்த விஜயின் பொதுக்கூட்டத்தில் இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் இருந்த இளைஞர் உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (பிப்.13) சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, அவர் விமானத்தில் சென்னை புறப்பட்டுச் சென்றார். பிரச்சாரத்துக்கு காவல்துறையினர் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இளைஞர் மரணம்:

இந்நிலையில், சேலத்தில் நடந்த விஜயின் கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த வடமாநில இளைஞர், கூட்டத்தில் சிக்கி மயங்கி இருக்கிறார். உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: 'என் ஆடு செத்துப்போச்சு'.. ஸ்காலர்ஷிப் பணத்தில் ஆடு வாங்கிய மாணவர் மரணம்.!

அடையாளம் தெரிந்தது:

உயிரிழந்த வடமாநில இளைஞர் யார்? எதற்காக விஜயின் கூட்டத்துக்கு வந்திருந்தார்? யார் அழைத்து வந்தார்கள்? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிராஜ் என்ற 33 வயதுடைய நபர் உயிரிழந்தது தெரியவந்தது. இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் சேலத்தில் தங்கியிருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது விஜயின் கூட்டத்துக்கு வந்து உயிரிழந்துள்ளார். 

கடந்த 1 ஆண்டுகளாக இதய நோய் காரணமாக பாதிக்கப்பட்டு, அதுதொடர்பான சிகிச்சையும் எடுத்துக்கொண்ட இளைஞர் சிராஜ், தற்போது விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் பொதுக்கூட்டத்துக்கு வந்தவர் வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: BREAKING: சற்றுமுன்... விஜய்யின் பொதுக்கூட்டத்திற்க்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! கூட்டத்தில் பரபரப்பு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tvk Salem Rally #TN politics #TVK Vijay #தவெக விஜய் #சேலம் பொதுக்கூட்டம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story