நள்ளிரவில் தனியாக இருந்த பெண்! அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் துடிதுடிக்க செய்த கொடூர காரியம்!
Youngman killed girl using dosaidawa

கர்நாடகா மைசூர், தரசிபுரா பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. 45 வயது நிறைந்த இவர் உடல்நலக்குறைவால் கணவன் இறந்தநிலையில், பிழைப்பிற்காக தனது இரு பிள்ளைகளுடன் திருப்பூர் அண்ணா நகரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார்.
அதனைதொடர்ந்து மகன் மற்றும் மகள் இருவருக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்தநிலையில் அவர்கள் இருவரும் வெளியூரில் வசித்து வந்துள்ளனர். லட்சுமி மட்டும் திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நள்ளிரவில் லட்சுமி தனியாக இருந்தபோது , அவரது வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் 22 வயது நிறைந்த பூபதி என்ற இளைஞர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லட்சுமி சத்தம் போட்டுள்ளார்.
அப்பொழுது ஆவேசமடைந்த பூபதி அறையில் இருந்த தோசைகல்லை எடுத்து லட்சுமியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை தாக்கி கொலை செய்த பூபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.