தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"கள்ளக்காதல் விவகாரம்..." அக்கா, காதலன் கொடூர கொலை..!! 20 வயது தம்பி வெறிச் செயல்.!

கள்ளக்காதல் விவகாரம்... அக்கா, காதலன் கொடூர கொலை..!! 20 வயது தம்பி வெறிச் செயல்.!

young-woman-and-her-illegal-affair-was-brutally-murdere Advertisement

மதுரை மாவட்டத்தில் திருமணமான பின்பும் காதலனுடன் கள்ள உறவில் இருந்த இளம் பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் தம்பி காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறான்.

மதுரை மாவட்டம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் திருமணம் முடிந்த பின்பும் தனது காதலனுடன் உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தம்பி தனது சகோதரியுடன் உறவில் இருந்த கள்ளக்காதலனை கொலை செய்ததோடு அவனது தலையை வெட்டி எடுத்து வந்து ஊரின் நடுவே இருக்கும் நாடக அரங்கில் வைத்திருக்கிறான்.

இதற்குப் பின்பும் அவனது ஆத்திரம் அடங்காததால் தனது சகோதரியை கழுத்தறுத்து கொடூரமாக படுகொலை செய்துள்ளான். மேலும் இதனை தடுக்க வந்த தாயின் கையையும் வெட்டி இருக்கிறான். இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளான். இதனையடுத்து 20 வயது இளைஞனை கைது செய்துள்ள காவல் துறை இறந்த பெண் மற்றும் அவரது கள்ளக்காதலனின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.tamilnadu

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தம்பியே தனது அக்கா மற்றும் அவரது கள்ள காதலனை வெட்டி படுகொலை செய்த சம்பவம் கொம்பாடி கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக சரணடைந்த இளைஞனிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #illegal affair #Twin Murder #Brother gruesome Act #Accused Surrender
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story