×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புரோட்டா சூரியை மிஞ்சிய இளைஞர்.! 4 நிமிடத்தில் மொத்த பிரியாணியையும் சாப்பிட்டு தங்கத்தை அள்ளிச்சென்ற இளைஞர்.!

பிரியாணி சாப்பிடும் போட்டியில் இளைஞர் ஒருவர் தங்க நாணயம் பரிசு வென்று அசத்தியுள்ளார்.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஈட்டிங் சேலஞ்ச் பாய்ஸ் மற்றும் ஜேசிஐ சின்னசேலம் ஆகிய இரு அமைப்புகள் பிரியாணி உண்ணும் போட்டியை நடத்தியுள்ளனர். அதாவது பத்து நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணி சாப்பிட வேண்டும் என்பதே போட்டி.

இந்த பிரியாணி திருவிழாவில் கலந்துகொண்டு பத்து நிமிடத்தில், ஒரு கிலோ பிரியாணி சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி காசு பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்த போட்டிக்கு முதலில் வரும் 30 பேர் மட்டுமே போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தனர். அதில் குறைந்த நேரத்தில் சாப்பிட்டு முடிக்கும் முதல் 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த பிரியாணி திருவிழாவில் பலரும் கலந்துகொண்ட நிலையில், கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய ராமகிருஷ்ணன் என்ற இளைஞர் நான்கரை நிமிடத்திற்குள் ஒரு கிலோ பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசான 10 கிராம் தங்க காசு மற்றும் கேடயத்தை பெற்றுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#biriysni
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story