எனக்கு மட்டும் கல்யாணம் ஆகலயே..! ஏக்கத்தில் வாலிபர் செய்த பகீர் செயல்.!
கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி. இவருக்
கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி. இவருக்கு ஜெயசிங் (29) உள்பட 3 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் ராஜாமணியின் பிள்ளைகளில் ஜெயசிங் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது. ஜெயசிங் திருமணமாகாத நிலையில், கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் ஜெயசிங் தனக்கு மட்டும் திருமணம் ஆகவில்லையே, மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே என திருமணமாகாத ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் தினமும் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் யாரிடமும் சரிவர பேசாமல் தனியாக வசித்து வந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெயசிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், திருமண ஏக்கத்தில் ஜெயசிங் தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.