×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெற்றோர் வெளியே சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த மாணவி! இளைஞன் செய்த கொடூர செயல்!

young man killed young girl

Advertisement


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி சுந்தரமூர்த்தி-கொளஞ்சி தம்பதியின் மகளான திலகவதி என்ற கல்லூரி மாணவி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஏ படித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று காலை சுந்தரமூர்த்தி வேலை தொடர்பாக வெளியூர் சென்று விட்டார். கொளஞ்சி உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். இதையடுத்து திலகவதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் அவர் தனியாக இருந்தார்.

இதையறிந்த ஆகாஷ் என்ற வாலிபர், வீட்டிற்குள் புகுந்து, திடீரென கத்தியால் திலகவதியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் காயம் அடைந்த திலகவதி அந்த சமயத்தில் உறவினருக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் திலகவதியை ஏற்றி கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தலைமறைவாக இருந்த ஆகாஷை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆகாஷ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். பின்பு தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தது தெரிய வந்தது. மாணவியை ஆகாஷ் கொலை செய்ததற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #police arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story