வேலை தேடிச் சென்ற இளைஞர் படுகொலை... பணத்திற்காக வெறி செயல்.!! 3 பேர் கைது.!!
வேலை தேடிச் சென்ற இளைஞர் படுகொலை... பணத்திற்காக வெறி செயல்.!! 3 பேர் கைது.!!
ஈரோடுக்கு வேலை தேடி வந்த இளைஞர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 3 நபர்களை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு பேருந்து நிலையம் அருகேயுள்ள கழிவு நீர் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையின் விசாரணையை தொடர்ந்து இறந்த நபர் வேலூர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்று தெரிய வந்தது.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் முகேஷ், சுகிர்தன் மற்றும் செல்வம் ராஜ் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் மூவரும் சேர்ந்து இளைஞரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். வேலூரைச் சேர்ந்த விஜயகுமார் வேலை தேடி ஈரோடுக்கு வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: மது குடிப்பதில் தகராறு... ஏமானாக மாறிய நண்பர்கள்.!! இளைஞர் படுகொலை.!!
இந்நிலையில் மது அருந்துவதற்காக டாஸ்மாக் சென்ற அவரிடம் அதிகமான பணம் இருப்பதை கவனித்த முகேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து விஜயகுமார் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு பணத்தை திருடியதை காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: "உனக்கு சொத்து தரமாட்டாரு.." தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!