×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலிப்பதாக நடித்து திருமண ஆசை வார்த்தை காட்டி சிறுமிக்கு மோசம் செய்த இளைஞர்: போக்சோவில் கைது...!

சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி மோசம் செய்த இளைஞர்;போக்சோவில் கைது...!

Advertisement

கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்கோட்டை ஊராட்சி மில்லத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பதினேழு வயது பள்ளி மாணவி. இவரை அதே பகுதியை சேர்ந்த வினோத் என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். மேலும் வினோத் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த மாணவி கர்பமடைந்துள்ளார். இதனால் மாணவி அந்த இளைஞரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அதற்கு வினோத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வினோத் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #pudukkottai #sexual abuse #pokso act
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story