×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருமகளின் அறையில் கேவலமான செயலை செய்த மாமியார்.! மனமுடைந்து உயிரைவிட்ட மருமகள்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!


மருமகளின் அறைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து மாமியார் செய்த கொடுமையால் இளம் பெண

Advertisement


மருமகளின் அறைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து மாமியார் செய்த கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும், ஜோதிஸ்ரீ என்ற பெண்ணிற்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஜோதிஸ்ரீ கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மாமியார் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் மாடிக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் அம்சா, ஜோதிஸ்ரீ இருக்கும் அறைக்குள் செல்லும் மின் வயரை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையடைந்த ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஜோதிஸ்ரீ குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜோதிஸ்ரீ செல்போனில் இருந்து சில வீடியோக்கள் அழிக்கப்பட்டதை கண்டறிந்த போலீசார் அதனை ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் கைப்பற்றினர். அதில் கணவரும், மாமியாரும் செய்த கொடுமைகள் பற்றியும், தனது சாவுக்கு அவர்கள் இருவரும் தான் காரணம் என்று  ஜோதிஸ்ரீ கூறியிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பாலமுருகன், மாமியார் அம்சா, பாலமுருகனின் சகோதரர் சத்யராஜ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young girl suicide #torture
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story