வீட்டில் தனிமையில் இருந்த மகள் செய்த விபரீத காரியம்! நேரில் பார்த்த தாய் மயக்கம்!
Young girl commit suicide in nithravilai village
நித்திரைவிளை என்னும் பகுதியில் மூன்றாம் ஆண்டு கல்லூரி படித்துவந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நித்திரைவிளை அருகே சின்னத்துரை என்னும் மீனவ கிராமத்தில் வசித்து வருபவர் கிறிஸ்துதாஸ். மீன் பிடி தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி பெயர் கீதா. இவர் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்துவருகிறார்.
இந்நிலையத்தில் கிறிஸ்துதாஸ், கீதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மக்கள் கோவையிலும், இரண்டாவது மகள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றிலும் படித்துவருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வேளைக்கு சென்றுவிட்டன்னர்.
வேலை முடிந்து கீதா வீட்டிற்கு திரும்பியபோது அவரது இளைய மகள் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த கீதா சம்பவ இடத்திலையே மயங்கி கீழே விழுந்துவிட்டார். சமப்வ இடத்திற்கு விரைந்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.