முதல் இரவு கனவோடு கணவன் வீட்டிற்கு சென்ற இளம் பெண்..! இரண்டே மாதத்தில் நடுவீட்டில் பிணமாக தொங்கிய டீச்சர்.! அதிர்ச்சி காரணம்.!
Young girl commit suicide
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வல்லூர் எனும் பகுதியை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை பத்மபிரியா. இவருக்கும் மேலூர் பகுதியை சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், திருமணம் முடிந்த நாளில் இருந்து ராஜாராமின் குடும்பத்தினர் பத்மபிரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக தெரிகிறது.இதுகுறித்து பத்மபிரியா ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னுடைய கணவர் மீது வரதட்சனை புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் சண்டை வந்த நிலையில் பத்மபிரியாவை அவரது கணவர் வீட்டினர் அவரது பெற்றோரின் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர். அங்கு சென்றதில் இருந்தே மனஅழுத்ததில் இருந்த பத்மப்ரியா சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ண்டார்.
மேலும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே எனது தற்கொலைக்கு காரணம் என அவர் கைப்பட கடிதமும் எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.