×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தவறான பழக்கத்திற்கு அடிமையாகி, நண்பனுடன் சேர்ந்து வாழ்க்கையினை சீரழித்துக்கொண்ட இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!

young girl arrested by police

Advertisement


சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா லிப்ஷா(42). இவர் நுங்கம்பாக்கத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 12-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு தனது தோழி ரோகிணியுடன் தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் நடைபயற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது இவர்கள், சன் பிளாசா அருகே நடந்து வரும் போது, பின்னால் பைக்கில் இளம் பெண் ஒருவருடன் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் பிரசன்னா லிப்ஷாவின் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றார்.

இதனையடுத்து பிரசன்னா லிப்சா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணைக்காக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அதில் பைக் ஓட்டிய நபர் ஹெல்மட் அணிந்திருந்ததால், அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை, அதுமட்டுமின்றி பின்னால் இருந்த பெண்ணும் சரியாக தெரியவில்லை, வண்டியின் எண்ணை வைத்து விசாரித்த போது, அது காணமல் போன பைக் என்பது தெரியவந்துள்ளது. 
இருப்பினும் குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, உடனடியாக தனிக்குழு அமைக்கப்பட்ட, பொலிசாரிடம் வாட்ஸ் அப் குழுவிற்கு பைக், அந்த பெண்ணின் புகைப்படம் போன்றவைகளை அனுப்பியுள்ளனர்,

மேலும், இதுதொடர்பாக விசாரணை செய்தபோது சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே உள்ள வீட்டில் அந்த பைக் நிற்பதை போலீசார் பார்த்துள்ளனர். பின்னர் உள்ளே சென்ற போது, பெண் மற்றும் இளைஞர் ஒருவர் இருந்துள்ளனர், அவர்கள் இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயற்சித்தபோது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் செல்போனை பறித்துச் சென்ற வாலிபரின் பெயர் ராஜூ (29) சூளைமேட்டை சேர்ந்தவர். இவர் கையில் பச்சை குத்தும் தொழில் செய்கிறார். பின்னால் உட்கார்ந்து இருந்த இளம்பெண்ணின் பெயர் சுவாதி (20). கரூரை சேர்ந்த இவர், சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

அப்போது சுவாதி அளித்த வாக்குமூலத்தில், இன்ஸ்டாகிராம் மூலம் பல ஆண் நண்பர்களின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் நல்ல வசதியான ஆண் நண்பர் என்பதால், அவருடன் நெருக்கமாக பழகி, கிளப்பிற்கு செல்வது, மது அருந்துவது போன்ற பழக்கம் ஏற்பட்டதாக கூறினார்.

ராஜூ மீது ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு வடபழனி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளும், 2 செல்போன்களும் மீட்கப்பட்டது. மோட்டார் சைக்கிளை வேளச்சேரி பகுதியில் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young girl #police arrest
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story