தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விவசாய நிலத்தில் டிராக்டரில் அமர்ந்து செல்ஃபி எடுத்த இளைஞர்.! டிராக்டருடன் 120 அடி ஆழ கிணற்றில் விழுந்து ஏற்பட்ட துயரம்.!

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன மோட்டூரில் டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 

young-boy-falls-to-120-feet-depth-well-with-tractor Advertisement

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் சஞ்சீவி. 19 வயது நிரம்பிய சஞ்சீவி கேட்டரிங் படித்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டின் அருகேயுள்ள விவசாய நிலத்துக்கு சஞ்சீவி நேற்று நண்பகலில் சென்றார். அங்கு சவுந்தர் என்பவர் டிராக்டரில் வயலை உழுது கொண்டிருந்துள்ளார்.

இதனையடுத்து சவுந்தர் டிராக்டரை நிலத்தில் நிறுத்திவிட்டு, அதன் சாவியை எடுக்காமல் சாப்பிட சென்றுள்ளார். இந்தநிலையில், டிராக்டரில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி சஞ்சீவி தனது செல்போனில் படம் எடுத்து, அதைத் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக இயங்கிய டிராக்டருடன் சஞ்சீவி ஆழமான  கிணற்றில் கவிழ்ந்து விழுந்தார். 

இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சஞ்சீவின் உடலை மீட்டனர். செல்பி மோகத்தில் கவனக்குறைவாக டிராக்டரை இயக்கியதால், இளைஞர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.young boy

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young boy #death #tractor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story