×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்த யோகிபாபு.! என்ன காரணம் தெரியுமா?

yogibabu meet vijayakanth

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடியனாக நடித்துவருகிறார் யோகி பாபு. யாமிருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்த பண்ணி மூஞ்சி வாயன் என்ற காதாபாத்திரம் இன்று இவரை தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக மாற்றியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் யோகி பாபுவிற்கு பார்க்கவி என்ற பெண்ணுடன் குலதெய்வ கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. மணமகள் மற்றும் மணமகன் வீட்டினர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். 

திருமண வரவேற்பு வரும் மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அவர் அறிவித்திருந்தார். இந்தநிலையில் வரும் 5-ம் தேதி சென்னையில் நடிகர் யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. 

இந்தநிலையில், தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரும் நேரில் சந்தித்து அழைப்புதழ் கொடுத்து வருகிறார். அந்தவகையில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை கொடுத்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Yogi babu #vijayakanth
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story