×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதன் முதலாக உலகசாதனை படைக்கும் ஜல்லிக்கட்டு!. புதுக்கோட்டையை நோக்கி ஓடும் முதல்வரும், அமைச்சர்களும்!.

world record jallikattu

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி கின்னஸ் சாதனை முயற்சிக்காக நடத்தப்பட்டுவருகிறது. உலகப் புகழ் ஜல்லிக்கட்டாக அமையும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலையில் தொடங்கி வைத்தார். 


கின்னஸ் சாதனை முயற்சி ஜல்லிக்கட்டு’’ குறித்து தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. விராலிமலையில் ஆங்காங்கே `ஜல்லிக்கட்டு நாயகனே’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பட்டமரத்தான் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்தத் தொகுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டு ப் போட்டி என்பதால், அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். அதேபோல்  அமைச்சர் தரப்பில் ஒவ்வொரு வருடமும் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது வழக்கம். அந்தவகையில் கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் ஜல்லிக்கட்டானது தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டி தமிழகம் முழுவதும் பேசப்படும்.  விராலிமலையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி, அதுபற்றியே மக்கள் பேச வேண்டும் என்பதற்காக, `கின்னஸ் சாதனை முயற்சி ஜல்லிக்கட்டு’ என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.            

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 2,000 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர். இந்த நிகழ்வை கின்னஸ் சாதனை நிகழ்வாக அங்கீகரிப்பதற்கு இங்கிலாந்தின் கின்னஸ் சாதனை ஆய்வாளர்கள் மார்க், மெலினி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
 
தமிழக அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளும் இந்த போட்டியைக் கண்டுகளிக்க ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் திரண்டு விழாவை பார்த்து ரசித்துவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jallikattu #pudukottai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story