அப்படி போடு! பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 உரிமைத் தொகை.... நிதி அமைச்சர் மரிய வில்சன் சொன்ன குட் நியூஸ்..! CM விஜய் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் தொடங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில், திட்டம் தொடங்கும் தேதி குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த தவெக, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தது.
இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!
மறுசீரமைப்புக்காக கால அவகாசம்
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, திட்டத்தை விரிவுபடுத்தவும் மறுசீரமைக்கவும் கால அவகாசம் தேவைப்படுவதாக அரசு கடந்த மே மாதத்தில் தெரிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ.2,500 வழங்குவதாக கூறிய நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 தொகையையும் தாமதப்படுத்துகிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
பயனாளிகளுக்கு தொடர்ந்து வரவு
இதையடுத்து, மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வழக்கம்போல வரவு வைக்கப்பட்டது. இதனால் திட்டம் நிறுத்தப்படுமா என்ற சந்தேகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
அண்மையில் தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்த நிதி அமைச்சர் மரிய வில்சன், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரூ.2,500 உரிமைத் தொகை திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், திட்டத்தை தொடங்கும் தேதி குறித்து முதலமைச்சர் விஜய் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் மீண்டும் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500....! அமைச்சர் சொன்ன சூசக பதில்.... அப்போ நாளை தெரிஞ்சுடும்!