அண்ணி வாங்க.. உங்ககிட்ட பேசணும்.! கொழுந்தனார்களை நம்பி வந்த அண்ணி.! நடுத்தெருவில் நடந்த பயங்கரம்.!
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரூபன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்ரி
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரூபன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்ரியா என்பவருக்கும், திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சுப்ரியாவும், ரூபனும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரூபனின் சகோதரர்கள் அவர்களது அண்ணி சுப்ரியாவிடம் பேசவேண்டும் என கூறி அழைத்துச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து புளியந்தோப்பு பகுதியில் உள்ள குருசாமி நகருக்கு சுப்ரியாவை அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்ரியாவை சரமாரியாக வெட்டினர். இந்த நிலையில், சுப்ரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைப்பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடினர்.