"மாமா நான் வேண்டாம்னா நீ உயிரோடவே இருக்க வேண்டாம்" - இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. பறிபோன உயிர்.!
கணவரை பிரிந்த பெண் கொலை செய்யப்பட்டார்.
தாய்மாமன் மகனை இரண்டாவதாக திருமணம் செய்ய மறுத்த பெண் கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
தம்பதிகள்:
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், இல்லாதூர் கிராமத்தில் வசித்து வருபவர் நிரோஷா (வயது 32). தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் மணவூரைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). தம்பதிகளுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து மகன், மகள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஐந்து மற்றும் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளில் கசந்த காதல்.. வருத்தத்தில் பிரிந்த மனைவி குத்திக்கொலை.. ஏரிக்கரையில் அரங்கேறிய கொடூரம்.!
பெண் கொலை:
இதனிடையே, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிரோஷா, குழந்தைகளுடன் இல்லத்தூரில் இருக்கிறார். இதனிடையே, கடந்த ஜூலை 08ம் தேதி உறங்கிக்கொண்டு இருந்த நிரோஷா கழுத்தில் காயத்துடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், நிரோஷாவின் தாய்மாமன் மகன் நாகராஜு (வயது 27) கைது செய்யப்பட்டார்.
விசாரணை:
இதுதொடர்பான விசாரணையில் நகராஜு அளித்த வாக்குமூலமாவது, "கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிரோஷாவுக்கும் - எனக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் நெருங்கி பழகினோம். ஒருகட்டத்தில் நிரோஷாவை நான் திருமணம் செய்ய முடிவெடுத்தேன். ஆனால், நிரோஷா என்னை திருமணம் செய்ய மறுத்து, வேறொருவரை திருமணம் செய்வதாக கூறினார். நான் இதுகுறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று நள்ளிரவில் நிரோஷ்வின் வீட்டுக்குச் சென்று ஹீட்டர் ஒயரால் கழுத்தை நெரித்துக்கொலை செய்தேன்" என தெரிவித்துள்ளார். விசாரணைக்குப்பின் நகராஜூவை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கணவரை தண்ணீர் தொட்டியில் அழுத்திக்கொலை செய்த மனைவி.. கள்ளக்காதலுக்காக பக்கா ஸ்கெட்ச்..!