பிடித்த பாடல் வைக்காததால் விபரீதம்.. மனைவியின் செயலால் அலறிய கணவன்.. சேலத்தில் சோகம்.!
ஆத்தூரை சேர்ந்த பெண்மணி தனக்கு பிடித்த பாடலை கணவன் வைக்காததால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
பிடித்த பாடலை கணவர் வைக்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர், பழனியாபுரம் பகுதியில் வசித்து வருபவர் அஜித் குமார். இவரது மனைவி புவனேஸ்வரி. தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது இருவருக்கும் 5 வயதுடைய ஒரு மகனும் இருக்கிறார். புவனேஸ்வரி மளிகை கடையில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
டிவி சேனல் மாற்றியதால் சண்டை:
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வரிக்கு பிடித்த பாடல் டிவியில் ஓடியதாக தெரிய வருகிறது. கணவர் டிவி பார்த்துக் கொண்டிருந்ததால் வேறு சேனலை மாற்றி இருக்கிறார். இதனால் கோபமடைந்த புவனேஸ்வரி தனக்கு பிடித்த பாடலை வைக்குமாறு கணவரிடம் வற்புறுத்திய நிலையில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இதையும் படிங்க: பிரிந்து சென்ற மனைவி மகிழ்ச்சியாக இருந்ததால் கொடூர கொலை.. சைக்கோ கணவன் வெறிச்செயல்..!
மனைவி தற்கொலை:
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையிட்டுள்ளனர். ஒருகட்டத்தில் கணவரின் செயலால் மனமுடைந்தவர் வேறு அறைக்கு சென்றுள்ளார். மனைவி நீண்ட நேரம் கடந்தும் வெளியே வராததால் சந்தேகமடைந்த கணவர் உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ந்து கூச்சலிட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை:
இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து புவனேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழப்பை உறுதி செய்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேலைக்கு செல்லாமல் நாள் முழுக்க சூதாட்டம்.. ரூ.15 லட்சத்தை இழந்த கூலித்தொழிலாளி தற்கொலை.!