×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மாவை தேடி அழுத பிஞ்சுகள்.. வீட்டில் சடலமாக கிடந்த தந்தை.. குடியால் முழுகிப்போன குடி.. கண்ணீரை வரவழைக்கும் துயரம்.! 

Tirupattur News: குடும்ப பிரச்சனையில் மனைவி கணவரை கொலை செய்தார். 

Advertisement

குடிப்பழக்கத்தால் கணவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். 

விவசாய குடும்பம்: 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, கொல்லங்குப்பம் ஊராட்சி, புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் குமார் (வயது 40). இவர் விவசாயி ஆவார். இவரின் மனைவி ரம்யா (வயது 35). தம்பதிகளுக்கு 14, 9 வயதுடைய 2 மகள்களும், 5 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இதனிடையே, குமார் மதுபோதைக்கு அடிமையானதாக தெரியவருகிறது. 

இதையும் படிங்க: ஐபோனுக்காக நடந்த கொடூர கொலை.. தாத்தாவை கொலை செய்த 13 வயது பேத்தி.. கூலிப்படையாக நண்பர்கள்.! ஷாக் சம்பவம்.!  

குடும்ப பிரச்சனை: 

இதனால் அவ்வப்போது தமப்திகளுக்கு இடையே குடும்ப பிரச்சனை நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினமும் நள்ளிரவு நேரத்தில் போதையில் வீட்டுக்கு வந்த குமார், மனைவி ரம்யாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரை சரமாரியாக வெட்டி இருக்கிறார். 

மரணம்: 

இந்த சம்பவத்தில் குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 குழந்தைகளும் உறங்கிக்கொண்டு இருந்ததால் விடிய-விடிய கணவரின் சடலம் அருகே உட்கார்ந்து இருந்துள்ளார். பின் அதிகாலை நேரத்தில் வாணியம்பாடி காவல் நிலையத்துக்கு நேரில் சென்று தகவலை தெரியப்படுத்தி சரணடைந்தார். 

வாக்குமூலம்: 

அதிகாரிகளிடம் கணவர் தினமும் குடித்துவிட்டு பிரச்சனை செய்து வந்ததால், மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று நடந்த தகராறில் கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கைது: 

மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ரம்யாவை கைது செய்தனர். இதனிடையே, காலை எழுந்த குழந்தைகள் இறந்த தந்தையை நினைத்து கதறி அழுதன. அம்மாவையும் தேடி பதறிப்போயினர். 

இதையும் படிங்க: முதுமை தந்த வலி.. பாரமாக நினைத்த மகன்.. ஓடும் ரயில் முன் தள்ளி... திடுக்கிடவைக்கும் சம்பவம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Tirupattur #Husband Wife #Alcoholic
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story