×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி.! குடி போதையில் இறந்ததாக நாடகம்.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.!

கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி.! குடி போதையில் இறந்ததாக நாடகம்.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.!

Advertisement

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமார். 50 வயது நிரம்பிய இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.இவருக்கு விஜயா என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி வழக்கம்போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த குமார் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயா கணவரின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, வழக்கம்போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த கணவன் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி விஜயா காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்தபோலீசார் இறந்து போன குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரின் மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் இருந்ததால் விஜயாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் கணவரை கொலை செய்ததை விஜயா ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் சிக்காமல் இருக்க கணவர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த வழக்கை தற்போது கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Wife #Murder #Husband
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story