×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவிக்கு டார்ச்சர் கொடுத்த கணவன்.! பரிதாபமாக போன உயிர்.!

குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவிக்கு டார்ச்சர் கொடுத்த கணவன்.! பரிதாபமாக போன உயிர்.!

Advertisement

விழுப்புரம் மாவட்டம் கிடார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் - விஜயலட்சுமி தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கிருஷ்ணன் தனது மனைவி விஜயலட்சுமியுடன் ஆவடி அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் தங்கி, செங்கல் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அவர்களின் பிள்ளைகள் 3 பேரும் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர்.

கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு  குடிபோதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இருவருக்குமிடையே நள்ளிரவு வரை தகராறு நடந்துள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து கிருஷ்ணனின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிருஷ்ணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவனை கொலை செய்த விஜயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Husband #Wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story