×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவரின் கள்ளக்காதல் வெளிவந்ததால் மனைவியின் கொடூர முடிவு!. தவிக்கும் 3 குழந்தைகள்!.

கணவரின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததால், மனைவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிப்பு பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர்  குற்றப்பிரிவு காவலராக வேலை புரிந்து வந்துள்ளார். இவருக்கு சுமதி மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சார்லசிற்கு பேஸ்புக் மூலம், ஜோதி பெண்ணுடன் பழக்கம் கிடைத்துள்ளது. இவர்களின் இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சென்னையில் வீடு ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.

அதை சார்லஸ் வாங்குவதற்கு முயன்றுள்ளார். ஆனால் அவரிடம் பணம் குறைவாக இருந்ததால், சார்லஸ், ஜோதியிடம் 7.5 லட்சம் வாங்கி, வீட்டை வாங்கியுள்ளார்.

அதன் பின் திடீரென்று ஜோதி மற்றும் சார்லசிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன் சார்லசின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் சார்லஸ் இல்லாததால், அங்கிருந்த அவரது மனைவி சுமதியிடம் உன்னுடைய கணவர் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும், பத்திரிகையில் செய்தி வெளியிட்டு அவமானப்படுத்துவதாகவும் மிரட்டிச் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த சுமதி வடசென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில், ஜோதி மிரட்டியது குறித்து புகார் அளித்ததால், பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த பெண், சுமதியிடம் அசிங்கமாக பேசியுள்ளார். இதனால் மனவேதனையில் சுமதி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட அவரது குழந்தைகள் கதறி அழுததால், அதைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுமதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Husband #illegal affairs #suicide #husband and wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story