×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சந்தோசமாக குற்றாலத்திற்கு சென்ற தம்பதி! அருவியில் குளித்த பின், நொடிப்பொழுதில் கணவனின் மடியில் மயங்கிய மனைவி! அடுத்த நடந்த அதிர்ச்சி...

புதுக்கோட்டை தம்பதிகள் சுற்றுலாக் பயணத்தில் சென்ற குற்றாலத்தில், கணவரின் மடியில் மனைவி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் சேர்ந்த ராமநாதன் மற்றும் தெய்வானை (65) தம்பதியினர், சமீபத்தில் சுற்றுலாவுக்காக குற்றாலம் சென்றிருந்தனர். உறவினர்களுடன் சேர்ந்து சென்ற இந்த பயணத்தில், அவர்கள் இரவுநேரத்தில் மெயின் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்து, பின்னர் அருவிக்கரையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அதிக நேரம் பயணித்ததனால் ஏற்பட்ட கலைப்பால் தெய்வானை திடீரென மயக்கம் அடைந்துள்ளார். கணவன் ராமநாதன் மடியில் மயங்கி விழுந்த தெய்வானையை பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக உறவினர்களின் உதவியுடன், தெய்வானையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, தெய்வானை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இந்த செய்தி ராமநாதன் மற்றும் அவரது உறவினர்களை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: திடீரென பெற்ற 3 வயது குழந்தை இறந்ததாக கூறிய தாய்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!

குற்றாலத்தில் ஏற்பட்ட சோக நிகழ்வு

இந்த சம்பவம் குற்றாலத்தில் சுற்றுலாவிற்கு வந்த தம்பதியரின் வாழ்க்கையை ஒரு கணத்தில் மாற்றியமைத்தது. கணவன் மடியில் மனைவி உயிரிழந்தது மிகுந்த கவலையை ஏற்படுத்திய நிகழ்வாகியுள்ளது. இது தொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே நாளில் லட்சாதிபதியான ஏழை மீனவர்! எத்தனை டன்கள் மீன்கள் வலையில் சிக்கியதுனு பாருங்க! கொண்டாடும் கிராம மக்கள்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kutralam tragedy #புதுக்கோட்டை தம்பதி #மயக்கம் மரணம் #Main falls incident #Tamil viral news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story