கணவனின் காதில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்த மனைவி மற்றும் மகன்! வெளியான அதிர்ச்சி தகவல்!
wife and son killed husband

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற கூலித் தொழிலாளி தினமும் மது அருந்திவிட்டு மனைவி மற்றும் தனது தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தாமாகவே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ராஜசேகர் மதுபோதையில் தனது மனைவி, தாய், மகனிடம் தகராறு செய்துள்ளார். நீண்ட நேரம் ராஜசேகரின் தொல்லையை தாங்கமுடியாத நிலையில் சமாளித்து வந்தனர்.
ஒருகட்டத்தில் கோவத்தின் உச்சத்திற்கு சென்ற ராஜசேகரின் மனைவி, மகன் மற்றும் அவரின் தாய் ஆகியோர் சேர்ந்து ராஜசேகரை கட்டிப்போட்டு காதில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜசேகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜசேகரின் மனைவி சுகுணா, தாய் செல்வி, மகன் ரவிவர்மன் மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.