காமத்துக்கு கணவரை பலிகொடுத்த மனைவி.. தலையில்லாத சடலமாக மீட்கப்பட்ட சோகம்.. பரபரப்பு பின்னணி.!
Chennai News: சென்னையில் சூட்கேசில் தலை இல்லாத ஆணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தலையில் இல்லாத சடலமாக கொன்று ரயில் நிலையத்தில் வீசிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
துப்பு கிடைத்தது:
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில் நிலையத்தில், ஜூன் 5ம் தேதி நீலநிற சூட்கேஸ் மீட்கப்பட்டது. சூட்கேசில் 35 வயதுடைய ஆணின் சடலம் தலை இல்லாமல் இருந்தது. இதனையடுத்து, சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். விசாரணையில், சூட்கேசில் இருந்த சடலத்தில் பாலிதீன் கவர் இருந்த நிலையில், அது மருத்துவமனை ஒன்றின் கழிவுகளை அகற்ற பயன்படுத்தும் சிவப்பு, மஞ்சள் நிற கவர் என உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கணவர், மாமனாரை கள்ளக்காதலுக்கு பலிகொடுத்த மனைவி.. கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவத்தின் ஷாக் பின்னணி.!
சுவிட்ச் ஆப்:
இறந்தவரின் உடலும் துண்டு துண்டாக இருந்தது. இறந்தவரின் உடலில் இருந்த டீசர்ட் கொண்டு நடந்த விசாரணையில், துணியின் பார்கோடு வைத்து விசாரிக்கப்பட்டது. இதனை வைத்து துணியை வாங்கியவரின் செல்போனுக்கு தொடர்புகொண்டது அது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இந்த நம்பரில் பதிவான கால் விபரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் நம்பருக்கு அதிகமுறை பேசியது உறுதி செய்யப்பட்டது.
பெண் கைது:
இந்த நம்பரில் வாட்சப் மட்டும் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த வாட்ஸப்பில் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் போட்டோவை வைத்து நடந்த விசாரணையில், பெண்மணி புற்றுநோயாளிகளுக்கு வீடு பிடித்து கொடுப்பது, தேவையான வேலை செய்வது போன்ற பணிகளை செய்து வரும் பெண் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த பெண்ணை நோயாளி தொடர்பு கொள்வது போல் பேசிய காவல்துறையினர், நேரில் வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோகிமா என்ற 35 வயது பெண்ணை கைது செய்தனர். உயிரிழந்தது அவரின் கணவர் அமீர் அலி (வயது 37) என்பது தெரியவந்தது.
கணவருக்கு பெண்களுக்கு தொடர்பு:
விசாரணையில், ரோஹிமாவுக்கு அசாமில் திருமணம் முடிந்து பெண் குழந்தை இருக்கிறார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, அமீர் அலியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் 2022 ம் ஆண்டு முதல் தேனாம்பேட்டையில் வசித்து வந்துள்ளனர். அமீர் அலிக்கு சில பெண்களுடன் தொடர்பு ஏற்படவே, இதனை ரோஹிமா கண்டித்து இருக்கிறார். இந்த விஷயம் தம்பதிகளுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, ரோஹிமாவுக்கு தி.நகரில் வசித்து வரும் அஷ்ரப் என்ற 31 வயதுடைய நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் காய்கறி கடையை வைத்து நடத்தி வருகிறார். இந்த பழக்கம் இருவருக்கும் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திய நிலையில், ரோஹிமா அஷ்ரப்பிடம் கணவர் சித்ரவதை செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறார்.
வாசனை திரவியம்:
அஷ்ரப் கணவரை விடுத்து தன்னுடன் வருமாறும், நாம் வாழலாம் எனவும் கூறி இருக்கிறார். ரோஹிமா கணவர் என்னை கொலை செய்துவிடுவார் என கூறவே, அவரை நாம் கொலை செய்யலாம் என கூறி இருக்கிறார். இவர்களின் திட்டப்படி, அமீர் அலிக்கு சம்பவத்தன்று தூக்க மாத்திரை கொடுத்து தூங்கவைத்த நிலையில், அரிவாள் மனையால் உடல் பாகத்தை ஒவ்வொன்றாக அறுத்துக்கொலை செய்துள்ளனர். பின் உடல் துர்நாற்றத்தை மறைக்க வாசனை திரவியம் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். பின் தலையை செங்கல்பட்டு பகுதியில் புதைத்து வந்துள்ளனர். விசாரணைக்கு பின் கள்ளக்காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காதல் திருமணத்துக்கு முட்டுக்கட்டை போட்ட தந்தை.. நெஞ்சில் குத்திய மகன்.. கொட்டகைக்குள் மருமகன் கண்ட அதிர்ச்சி காட்சி.!