×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நல்ல நாட்களில் தலைக்கு குளிப்பது ஏன்? ஆன்மீகம் சொல்வது என்ன?  

Head Bath Before Worship: தலைக்கு குளிப்பது உடல், மனதின் தூய்மையை அடையாளப்படுத்தும். 

Advertisement

மங்கள நிகழ்வுகளை விரதம், பூஜையுடன் தொடங்க உடலுக்கு புத்துணர்ச்சி அவசியம். 

தலைக்கு குளிப்பது.. 

Head Bath on Auspicious Days: நமது முன்னோர்கள் சுபநாட்களில் தலைக்கு குளிக்க வேண்டும் என்று எப்போது கூறுவார்கள். இது உடலை தூய்மையுடன் வைப்பது மட்டுமல்லாது, மனதையும் அமைதிப்படுத்தும். இவ்வாறான வாழ்க்கையை நெறிமுறையாக கடைபிடிக்க திருமணம், விரதம், பூஜை, பண்டிகை, பிறந்தநாள் என மங்கள நாட்களில் தலைக்கு குளிப்பதை முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர். 

இதையும் படிங்க: Spiritual Tips: தெய்வீக சக்தி வீட்டில் அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்.. கட்டாயம் இதை பண்ணிடுங்க.!

 

தூய்மை & வழிபாடு: 

தூய்மை என்பது உடலை மட்டும் குறிப்பிடாமல் மனம், சிந்தனை, செயல் ஆகியவற்றையும் குறிக்க வேண்டும். தலைக்கு குளித்ததும் தெய்வ வழிபாடு செய்வது பக்தி உணர்வை அதிகரிக்கும். கோயிலுக்கு செல்லும் முன் அல்லது வீட்டில் பூஜை செய்யும் முன் குளிப்பது நல்லது. உடலுக்கும்-மனதுக்கும் குளியல் புத்துணர்ச்சி தருவதால் உடலின் வெப்பமும் குறையும்., சோர்வு நீங்கும். 

 

உடல்நலம்: 

தலைமுடி, தலையில் இருக்கும் தோல் ஆகியவை சுத்தமாகி புத்துணர்ச்சி கிடைத்து மனம் தெளிவாகும். மகிழ்ச்சி, உற்சாகம் இருக்கும். சுப நிகழ்வுகளை தொடங்க மனம், உடல் தூய்மை இதனால் முக்கியத்துவம் பெறுகிறது. பழைய நிகழ்வுகளை, எதிர்மறை எண்ணங்களை, சோர்வை குறைக்கும் தன்மை குளியலுக்கு உண்டு. மனஒழுக்கமும் மேம்படும். மேலும், உடல் சுகாதாரத்தை மேம்படுகவும், உடல்நலக்குறைபாடுகளை தவிர்க்கவும் நல்லது. 

இதையும் படிங்க: சாப்பிட்டதும் இவ்வாறான விஷயங்களை செய்றீங்களா? ரொம்ப ஆபத்து.. உஷார்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Spiritual Tips #ஆன்மீகம் #குளியல் #கோயில் வழிபாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story