தமிழகத்தில் பேருந்துகள் எப்போது இயக்கப்படுகிறது? எந்தெந்த மாவட்டங்களுக்கு?
When will start bus in tamilnadu

தமிழகத்தில் குறைவான நோய்த்தொற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் அதிக பாதிப்பு கொண்ட சென்னை போன்ற நகரங்களுக்கு பேருந்து சேவை முற்றிலும் தற்போது இருக்காது என தெரிவித்தனர்.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா கோரத்தாண்டவம் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மே 17ஆம் தேதிக்கு பின்னர் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அந்தவகையில் 4 வது ஊரடங்கில் பொது போக்குவரத்துக்கு வழி வகை செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது, அதில் விமானம், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சிலகட்டுப்ப்பாடுகளுடன் தொடங்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் சில மாவட்டங்கள் கொரோனோ இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு விரைவில் குறைந்த அளவிலான போக்குவரத்து சேவையை தொடங்க ஆலோசித்து வருகிறோம். இன்னும் இரண்டு நாட்களில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல குறைவான நோய்த்தொற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் அதிக பாதிப்பு கொண்ட சென்னை போன்ற நகரங்களுக்கு பேருந்து சேவை முற்றிலும் தற்போது இருக்காது என தெரிவித்தனர்.