×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன கொடுமை இது!! ஒன்றரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை...அதிர்ச்சியில் உறைந்த குழந்தையின் தாய்..!

என்ன கொடுமை இது!! ஒன்றரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை...அதிர்ச்சியில் உறைந்த குழந்தையின் தாய்..!

Advertisement

திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். ராமராஜ் கஞ்சா மற்றும் குடிப்பழத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாக சொல்லப்படுகிறது ராமராஜ்க்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

சம்பவத்தன்று இரவு தன் குழந்தையின் அருகில் படுத்து உறங்கியுள்ளார் ராமராஜ். ஆனால் சிறிது நேரத்திலே குழந்தையின் அழுகை சத்தம் கேட்கவே உறங்கிக் கொண்டிருந்த தாய் எழுந்து வந்து பார்த்தபோது ராமராஜ் தனது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அறிந்துள்ளார் மனைவி.

இந்நிலையில் உடனே குழந்தையை அங்கிருந்து மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் குழந்தையின் தாய். மேலும் அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தையின் பிறப்புறுப்பில் இரத்த காயம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இது குறித்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தகவல் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த மகளிர் போலீசார் குழந்தையின் தந்தை ராமராஜ் மற்றும் தாயிடம் விசாரணை மேற்கொண்டு ராமராஜை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual Harrasment #Investigation #arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story