×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் தயார்நிலை!. பயன்படுத்தி கொள்ளுங்கள்!

Volunteers helping to Gaja affected peoples

Advertisement

 

கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.


கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தன்னார்வலர்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். மேலும் உதவி தேவைபட்டால் கீழ்க்கண்ட அலைபேசி என்களை தொடர்புகொள்ளுமாரும் கேட்டுக்கொள்கின்றனர்.

புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல வாடகை இன்றி Eicher Tata Ace தேவைக்கு அணுகவும். 9790380040

மின்சாரம் இல்லாத ஊருக்கு 2000 வாட்ஸ் ஜென்ரேட்டர் உள்ளது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9500764610 7305103190  வாடகை வேண்டாம்.

மன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவைப்படுவோர் இந்த எண்களுக்கு அழைக்கவும்.*
ராம் :7871892877 பாலாஜி: 9944332270 ராசா :88838 88147 ரஞ்சித் :90471 83130

முத்துப்பேட்டையில் 700 பேருக்கான உணவு தயாராக உள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் தேவைப்படுபர்கள் பெற்றுக்கொள்ளவும் சபரிசீனிவாஸ்: 9025005329

பட்டுக்கோட்டை லட்சுமிப்ரியா மண்டபத்தில் உணவு , குடிநீர் தயாராக உள்ளது. வாகன வசதி உள்ள அருகாமை கிராம இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். உணவு தேவைப்படுவோர் பாத்திரங்கள் எடுத்து வந்தால் உதவியாக இருக்கும்.
தொடர்புக்கு ஜெயப்பிரகாஷ்: 91711 21711

ஜெனரேட்டர் மூலம் குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவை இருந்தால் அணுகவும். இடம் - கரிக்காடு, பட்டுக்கோட்டை சதீஷ்குமார்: 9894503455, 9042324217

பட்டுக்கோட்டை குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்றால் இந்த எண்னை தொடர்பு கொள்ளவும் 7010207765

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gaja cyclone #Gaja relief fund
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story