×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தவெகவுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்.!

Sasikala Joins Vijay's TVK Alliance? சசிகலா-தமிழக வெற்றி கழகம் இடையே கூட்டணி குறித்து பிப்ரவரி 24ல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் வி.கே. சசிகலா விரைவில் கூட்டணியை இறுதி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணிக்கு காத்திருப்பு:

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல்களம் சூடேறி இருக்கிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், தேமுதிக மற்றும் பாமகவின் ராமதாஸ் தரப்பு, புதிய தமிழகம், சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது கூட்டணி நிலைப்பாடுகளை அறிவிக்கவில்லை.

இதையும் படிங்க: அடிமேல் அடிவாங்கும் எடப்பாடி! தவெகவில் இணையும் அதிமுக வின் முன்னாள் எம்பி....! தவெக அரசியலில் பரபரப்பு!

விரைவில் அறிவிப்பு?

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தோழியான சசிகலா, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி பிப்ரவரி 24ம் தேதி அன்று மதுரை மாநாட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு கட்சியில் மீண்டும் இடமில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், சசிகலா தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், அடுத்த நடவடிக்கை குறித்து தீர்மானிக்க ஆலோசனை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இதோடு, தனது சகோதரர் திவாகரன் நடத்தும் அண்ணா திராவிட கழகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய்-சசிகலா சந்திப்பு?

ஏறக்குறைய சசிகலா - தவெக கூட்டணியை உறுதி செய்யும் வகையில், அண்ணா திராவிட கழக இளைஞரணி செயலாளர் ஜெய் ஆனந்த், தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனால் வரும் நாட்களில் சசிகலா - தமிழக வெற்றி கழக கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும், இந்த நிகழ்வின்போது விஜய் & சசிகலா சந்திப்பு நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: VK Sasikala: புதிய கட்சியா? தம்பி கட்சியா? தமிழக அரசியலில் புதிய புயல்.. சசிகலாவின் முடிவு என்ன?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தவெக கூட்டணி #TVK Alliance #Sasikala Vijay Alliance #சசிகலா #தமிழக வெற்றி கழகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story