×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாலை நேரத்தில் மாமனார் ஜன்னல் வழியே கண்ட அதிர்ச்சி! 2 ஆண்டு திருமண வாழ்க்கை தான்...கடிதத்தில் கிடைத்த அதிரவைக்கும் காரணம்!!!

திருவனந்தபுரம் விழிஞ்ஞத்தில் இளம்பெண் விக்னேஷ்வரி தூக்கிட்டு உயிரிழந்த வழக்கில், அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில் கணவர் அபிலாஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞத்தில் 27 வயதான விக்னேஷ்வரி தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில் கணவர் அபிலாஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விழிஞ்ஞத்தைச் சேர்ந்த அபிலாஷை திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் இல்லாத நிலையில், சம்பவத்தன்று அவர் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. மாலை வீட்டிற்கு வந்த மாமனார் சந்திரன், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து பார்த்தபோது, விக்னேஷ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "அம்மா.. என் செல்போனை செக் பண்ணுங்க, எல்லாமே இருக்கு!" - தற்கொலைக்கு முன் இளம்பெண் வெளியிட்ட அந்த ஆடியோ. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

விசாரணையில் திருப்பம்

உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்ப விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்பட்ட நிலையில், விக்னேஷ்வரியின் உறவினர்கள், கணவர் குடும்பத்தினரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்தனர்.

கடிதத்தின் அடிப்படையில் கைது

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விக்னேஷ்வரி எழுதியதாகக் கூறப்படும் கடிதம் போலீசாரால் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், கணவர் மதுபோதையில் அடிக்கடி உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில், அபிலாஷ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: திருமண நாளை கொண்டாடிய சில நாட்களுக்குள் ஐ.டி வேலை பார்க்கும் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! கடிதம், செல்போனில் கிடைத்த அந்த ஆடியோ....பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vizhinjam #Vigneshwari #Abhilash #Suicide case #Kerala news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story