×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நள்ளிரவில் நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிகொண்டிருந்த 4 வயது சிறுமி மாயம்! சிசிடிவி- யில் சிக்கிய அதிர்ச்சி காட்சி...!!!

விசாகப்பட்டினத்தில் பெற்றோருடன் நடைபாதையில் தூங்கிய 4 வயது சிறுமி நள்ளிரவில் மாயமானார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

விசாகப்பட்டினத்தில் பெற்றோருடன் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி நள்ளிரவில் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் வந்திருந்த தம்பதியினர், மகளுடன் நடைபாதையில் தூங்கியுள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில் சிறுமியைக் காணாததால் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

சிசிடிவியில் சிக்கிய ஸ்கூட்டர் காட்சி

புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவர் சிறுமியை ஸ்கூட்டரில் அழைத்துச் செல்வது பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கஜுவாகா நோக்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவிக்கு உதவி செய்ய வந்த இடத்தில்.... டார்ச்சல் செய்த இளம்பெண்! கணவனை வளைத்து போட்ட கொடூரம்! ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி சம்பவம்!!!

சிசிடிவி காட்சியில் பதிவான ஸ்கூட்டர் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன் அடிப்படையில் எஸ்.ராயவரத்தைச் சேர்ந்த பிரதிபா மற்றும் கிரிவிடியைச் சேர்ந்த உபேந்திரா ஆகியோர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறுமியை தேடும் பணியில் 3 தனிப்படைகள்

காணாமல் போன சிறுமியை விரைவாக மீட்கவும், சந்தேக நபர்களைப் பிடிக்கவும் மூன்று தனிப்படை காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் தற்போதைய நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

நள்ளிரவில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மாயமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: நள்ளிரவு நேரத்தில் முகமூடி ஆசாமி செய்த அலப்பறை…! இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்.....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விசாகப்பட்டினம் #Girl Kidnapping #4 வயது சிறுமி #CCTV Footage #Andhra Pradesh Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story