தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் தோல்வியால் காதலி வீட்டுமுன் பெட்ரோல் ஊற்றி 24 வயது இளைஞர் தற்கொலை; துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

காதல் தோல்வியால் காதலி வீட்டுமுன் பெட்ரோல் ஊற்றி 24 வயது இளைஞர் தற்கொலை; துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

Virudhunagar Sivakasi Man SUicide infront of Love Girl Home Advertisement

 

தான் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காதலி தன்னை கைவிட்டதால் மனமுடைந்த இளைஞர் காதலியின் இல்லம் முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டி.காமராஜர்புரம் பகுதியில் வசித்து வருபவர் கோவில் பிச்சை (வயது 51). இவரின் மகன் தேவகுமார் (வயது 24). இவர் எஞ்சினியரிங் முடித்துவிட்டு துபாயில் பணியாற்றி வருகிறார். மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த பிச்சை, தேவகுமாரிடம் அது குறித்து பேசியுள்ளார். 

அப்போது தேவகுமார் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணை 2 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய விருப்பப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்திற்கு பிச்சையும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த சில வாரமாக தேவகுமாரோடு பெண்மணி பேசவில்லை. 

Virudhunagar

இந்த விஷயம் குறித்து தந்தையிடம் கவலை தெரிவித்த தேவகுமார், ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தாயகம் திரும்பிய தேவகுமார், காதலியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன தேவகுமார், காதலியின் வீட்டு முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைசெய்துகொண்டார்.

உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட தேவகுமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வச்சகாரப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Virudhunagar #sivakasi #suicide #death #police #tamilnadu #Investigation #விருதுநகர் #சிவகாசி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story