தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: தமிழகமே அதிர்ச்சி.. திமுக பிரமுகர் ஓடஓடவிரட்டி வெட்டிக்கொலை.. பெரும் பரபரப்பு.!

#BigBreaking: தமிழகமே அதிர்ச்சி.. திமுக பிரமுகர் ஓடஓடவிரட்டி வெட்டிக்கொலை.. பெரும் பரபரப்பு.!

Viluppuram Vanur DMK Party Politician Killed by 3 Man Gang Advertisement

வானூர் அருகே திமுக பிரமுகர் 3 பேர் கும்பலால் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர், கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆவார். இவரின் தாயார் ஊராட்சிமன்ற தலைவராகவும் இருக்கிறார். 

இந்நிலையில், இன்று ஜெயக்குமார் கோட்டாக்கரையில் இருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவரை இடைமறித்த 3 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டியுள்ளது. 

தன்னை கொலை செய்யப்போகிறார்கள் என்பதை உணர்ந்த ஜெயக்குமார் தப்பி செல்ல முயற்சிக்கவே, அவரை விரட்டி சென்ற கும்பல் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அரிவாளால் வெட்டிச்சரித்து தப்பி சென்றது. 

tamilnadu

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் ஆரோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜெயக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால், மருத்துவமனைக்கு செல்வதற்குள் ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழக்கவே, இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஜெயக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் திமுக பிரமுகர் ஜெயக்குமார் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Viluppuram #Vanur #dmk #politics #Murder #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story