தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புத்தாண்டு கொண்டாட வந்து மனைவியை தொலைத்த கணவன்.. கண்ணீர் கதறல்..!

புத்தாண்டு கொண்டாட வந்து மனைவியை தொலைத்த கணவன்.. கண்ணீர் கதறல்..!

Viluppuram Native Couple Celebrate New Year at Pondicherry Wife Missing Husband File FIR Advertisement

புதுச்சேரிக்கு புத்தாண்டை மனைவியுடன் கொண்டாட வந்தவர், மனைவியை தொலைத்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம், முதலியார்குப்பம் பகுதியை சார்ந்தவர் அன்பரசன் (வயது 30). இவர் மீனவராக இருந்து வருகிறார். இவரின் மனைவி சந்திரா (வயது 28). இவர்கள் இருவருக்கும் மகன், மகள் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த டிச. 31 ஆம் தேதி புத்தாண்டை கொண்டாட அன்பரசன், தனது மனைவியுடன் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். குழந்தைகள் இருவரும் அன்பரசனின் தாயார் அஞ்சலாட்சியின் பொறுப்பில் வீட்டில் இருந்துள்ளனர்.

Viluppuram

தம்பதிகள் இருவரும் பாண்டிச்சேரியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு கடற்கரைக்கு வந்துள்ளனர். அப்போது, சந்திரா கடற்கரை அருகேயுள்ள கழிவறைக்கு சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. 

அவரை பல இடங்களில் அன்பரசன் தேடிப்பார்த்தும் காணவில்லை என்பதால், பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சந்திராவை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viluppuram #tamilnadu #Pondicherry #puducherry #India #Wife #missing
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story