×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறார்களை ஓரினசேர்கையில் ஈடுபடுத்தி கொன்று புதைத்தவனுக்கு பால் ஊற்றிய நட்புகள்?.. கடற்கரையில் துள்ளத்துடிக்க கபளீகரம்..!

சிறார்களை ஓரினசேர்கையில் ஈடுபடுத்தி கொன்று புதைத்தவனுக்கு பால் ஊற்றிய நட்புகள்?.. கடற்கரையில் துள்ளத்துடிக்க கபளீகரம்..!

Advertisement

2 சிறார்களை அடுத்தடுத்த வருடங்களில் ஓரினசேர்கையில் ஈடுபடுத்தி கொலை செய்து புதைத்த கயவன் கடற்கரையில் வைத்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளான். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம், மரைக்காயர் வீதி கடற்கரையில் வாலிபரின் சடலம் கிடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், கோட்டக்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இரத்த காயத்துடன் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையான வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலையானவர் மரக்காணம் - நொச்சிக்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் கலைமணியின் மகன் அபினேஷ் (வயது 23) என்பது தெரியவந்துள்ளது. 

கலைமணி தற்போது மனைவி வித்யா மற்றும் மகன் அபினேஷுடன் புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் வசித்து வருகிறார். அபினேஷ் நேற்று இரவில் நண்பர்களுடன் மதுபானம் அருந்த சென்ற நிலையில், அதனைதொடர்ந்தே கொலை சம்பவமும் நடைபெற்றுள்ளது. அபினேஷ் கடந்த 2019 & 2020 வருடத்தில் 2 சிறார்களை ஓரினசேர்கையில் ஈடுபடுத்தி கொன்று புதைத்த இரு வழக்குகளில் குற்றவாளி என்பதும் உறுதியானது. 

இதனால் அபினேஷுடன் மதுபானம் அருந்த வந்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? அபினேஷால் மகனை இழந்த பெற்றோர் அல்லது உறவினர்கள் பழிவாங்கினார்களா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viluppuram #tamilnadu #man #death #killed #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story