தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகமே அதிர்ச்சி.. இரத்த வெள்ளத்தில் தாய், மகள்.. நள்ளிரவு நடந்த கொடூரம்..!

தமிழகமே அதிர்ச்சி.. இரத்த வெள்ளத்தில் தாய், மகள்.. நள்ளிரவு நடந்த கொடூரம்..!

Viluppuram Kannamangalam Mother Daughter Murder by Strangers Advertisement

கண்ணமங்கலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் மகள் அடித்துக்கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் கலித்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது பெண்மணி சரோஜா. இவரது மகள் பூங்காவனம் (வயது 60). இவர்கள் இருவரும் நேற்று தங்களின் வீட்டில் வழக்கம் போல தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். 

இன்று காலை இருவரும் இரத்த வெள்ளத்துடன், வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இதனைப் போலவே, குள்ளஞ்சாவடி பகுதியில் சாலையோரம் படுத்து உறங்கிய அஞ்சம்மாள் மற்றும் நாகலிங்கம் ஆகியோரின் மீதும் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

Viluppuram

இவர்கள் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்திற்காக தாக்குதல் நடத்தி கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாவட்ட அளவிலான காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு உள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viluppuram #Kannamangalam #tamilnadu #Murder #police #Spark Tamil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story