மணமான 4 மாதத்தில்.. கணவன் எடுத்த முடிவு.. மனைவிக்கு எமனான சோகம்.!
மணமான 4 மாதத்தில்.. கணவன் எடுத்த முடிவு.. மனைவிக்கு எமனான சோகம்.!
விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண் கணவர் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
காதல் திருமணம்
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் என்ற நபர் முத்தரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, லட்சுமணனுக்கு குவைத்தில் வேலை கிடைத்து இருக்கிறது. "இந்த வேலைக்கு செல்ல வேண்டாம்.
இதையும் படிங்க: தாலிக்கயிறு ஏறிய சற்று நேரத்தில், தூக்கு கயிறு.. இளம்பெண்ணின் விபரீத முடிவு.!
விசா ஏற்பாடு
என்னுடனேயே இருந்து விடுங்கள்." என்று முத்தரசி எவ்வளவோ சொல்லி பார்த்துள்ளார். ஆனால், லட்சுமணன் மிகவும் பிடிவாதமாக, "வேலைக்கு சென்றே தீருவேன்." என கூறிவிட்டு விசா ஏற்பாட்டிற்காக மும்பை சென்றுள்ளார்.
தற்கொலை
கணவன் தான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை என்ற காரணத்தால் மன உளைச்சலில் இருந்த முத்தரசி தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: சமயபுரம் பக்தர்களே உஷார்.! பாதயாத்திரை, இறுதி யாத்திரையாக மாறிய சோகம்.!