×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தை போல் அமர்ந்திருக்கும் கேப்டன்.! ஷேவிங் செய்து, டை அடித்து, நகம் வெட்டிவிடும் மனைவி.! வைரல் வீடியோ.

Vijayakanth wife done shaving and nail cutting video

Advertisement

கேப்டன் விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா முகச்சவரம் செய்து, டை அடித்துவிட்டு, கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை வெட்டிவிடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி, பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், சாதாரண மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு சமயத்தில் வீட்டில் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதையும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிடுவருகின்றனர்.

சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கு அவரது மனைவி அனுஸ்கா ஷர்மா முடி வெட்டிவிடும் காட்சிகள் வெளியாகி வைரலானது. இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தை நாற்காலியில் அமரவைத்து அவரது மனைவி பிரேமலதா அவருக்கு ஷேவிங் செய்துவிட்டு, டை அடித்து, கை கால்களில் உள்ள நகங்களை வெட்டி விடும் காட்சி வைரலாகிவருகிறது.

இந்த வீடியோவை நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில் என்ற தலைப்புடன் விஜயகாந்த் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும், ஒரு குழந்தைபோல் விஜயகாந்த் நாற்காலியில் அமர்ந்திருக்க அவரது மனைவி அவருக்கு பணிவிடை செய்யும் காட்சிகள் ரசிகர்களையும், தொண்டர்களையும் நெகிழ்ச்சியடையவைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #vijayakanth #video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story