தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தை மீட்க, வாரி வழங்கிய கேப்டன் விஜயகாந்த்! பாராட்டித் தள்ளும் பொதுமக்கள்!

Vijayakanth relief fund for corona

Vijayakanth relief fund for corona Advertisement

சீனாவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பலர் உயிர் இழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிரமாக போராடிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை எதிர்த்து போராட மக்கள் நிதி உதவி செய்யுமாறு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.  இந்த நிலையில் பல பிரபலங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.

vijayakanth

இதற்கு முன்னதாக, தே.மு.தி.க. சார்பில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும், தே.மு.தி.க. தலைமை அலுவலகமும் கொரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மே 3-ந் தேதிக்கு பிறகு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijayakanth #corona #Fund
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story