×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது.? தேமுதிக வெளியிட்ட தகவல்.!


தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவ

Advertisement


தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. 

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று  தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் தேமுதிக தெரிவித்துள்ளது. மேலும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக தெரிவித்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijayakanth #dmdk
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story