தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரிசோதனை! அமைச்சர் விஜயபாஸ்கர்
vijayabaskar talk about corona

சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36,841-ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,667 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 6.38 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை தமிழகத்தில் சரியான பாதையில் செல்கிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பில் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.