×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 நாளில் எப்படி மாறுச்சு?? வேட்பு மனுவில் இப்படி ஒரு பிரச்சனையா? என்ன செய்யபோகிறார் விஜய்?

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரண்பாடுகள் இருப்பது விஜய்க்கு எதிராக சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி பங்கீடு முடிவடைந்து, கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சியும் முழு வேகத்தில் தேர்தல் பணியில் இறங்கியுள்ளது.

தவெக சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் அறிமுகப்படுத்திய விஜய், தானே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30-ம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த அவர், அங்கிருந்தே தனது பிரச்சாரத்தையும் தொடங்கினார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து அங்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வேட்புமனுக்களில் முரண்பாடுகள்

இந்நிலையில், இரண்டு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரம்பூர் மனுவில், தன் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்று விஜய் குறிப்பிட்டிருந்தார். ஆனால், திருச்சி கிழக்கு மனுவில், தன் மீது இரண்டு வழக்குகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் அரசியல் வட்டாரங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: திடீர் திருப்பம்! தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி.... இபிஎஸ் அறிவித்த இறுதி முடிவு!

வழக்குகள் குறித்த விளக்கம்

தகவலின்படி, பெரம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது அனுமதிக்கப்பட்ட அளவை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தியதும், ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், 2025 ஆகஸ்டில் மதுரையில் நடந்த தவெக மாநில மாநாட்டின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாகவும் விஜய் மற்றும் சிலர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு வழக்குகளும் வேட்புமனு விவரங்களில் வேறுபடையாக குறிப்பிடப்பட்டுள்ளன.

வயது விவரத்திலும் குழப்பம்

இதற்கிடையில், வயது தொடர்பான தகவல்களிலும் முரண்பாடு வெளிப்பட்டுள்ளது. பெரம்பூரில் தாக்கல் செய்த மனுவில் தனது வயதை 52 என குறிப்பிட்ட விஜய், திருச்சி கிழக்கு மனுவில் 51 என குறிப்பிடப்பட்டுள்ளார். குற்ற வழக்குகள் மற்றும் வயது உள்ளிட்ட விவரங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள், விஜய் மீது தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

இதனால், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சட்டரீதியான சிக்கல்கள் எழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் இந்த விவரங்களை ஆய்வு செய்து முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் முரண்பட்ட தகவல்கள்..... அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vijay nomination #Perambur Constituency #Trichy East #தவெக #Election controversy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story